விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.5.30 லட்சம், 20 பவுன் நகை மோசடி
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.5.30 லட்சம், 20 பவுன் நகை மோசடி.
தாம்பரம்,
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஹித் பாஜ்பாய் (வயது 39). இவர், தனது மனைவி அன்னு பாஜ்பாய் (35), 5 வயது மகளுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். அக்கம் பக்கத்தினரிடம் தான் விமான நிலையத்தில் பணிபுரிவதாக கூறிய ரோஹித் பாஜ்பாய், விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த பிரிசீலா (40) என்பவரிடம் ரூ.1.50 லட்சம், விஜயகுமாரி (39) என்பவரிடம் ரூ.3.80 லட்சம் பெற்று உள்ளார்.
அத்துடன் தனது மகளின் பிறந்த நாளில் அவளுக்கு அணிவித்து அழகு பார்த்துவிட்டு தருவதாக கூறி பிரிசீலாவிடம் 6 பவுன், விஜயகுமாரியிடம் 4 பவுன் மற்றும் ராஜலட்சுமி (33) என்பவரிடம் 10 பவுன் என மொத்தம் 20 பவுன் நகைகளையும் வாங்கினார். அதன்பிறகு அவர், தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் நகை, பணம் மோசடி செய்த ரோஹித் பாஜ்பாயை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story