மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது


மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது
x
தினத்தந்தி 17 Aug 2021 10:47 AM IST (Updated: 17 Aug 2021 10:47 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது.

திருவொற்றியூர்,

எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 32). இவர், திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் உள்ள ஒரு ஆப்டிகல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஹெல்மெட் அணிந்து கொண்டு எண்ணூர் விரைவு சாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மஸ்தான் கோவில் தெரு அருகே சென்றபோது எங்கிருந்தோ அறுந்து வானில் பறந்துவந்த மாஞ்சா நூல், பரத்குமாரின் கழுத்தை அறுத்தது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தொண்டையில் இருந்து ரத்தம் பீறிட்டது.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story