ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விட மாட்டோம் சீமான் உறுதி
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விட மாட்டோம் சீமான் உறுதி.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்தி படுகொலைக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். உயிர் இழந்தவர்களுக்கு தூத்துக்குடி மையப்பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக்கோரி இந்த சம்பவத்தில் பலியான சுனோலினின் தாயார் வனிதா உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
அப்போது அவர்களிடம், ‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விட மாட்டோம். உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற இறுதிவரை நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்’ என்று சீமான் உறுதி அளித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story