கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி


கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி
x
தினத்தந்தி 17 Aug 2021 1:23 PM IST (Updated: 17 Aug 2021 1:23 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி கலெக்டர் வழங்கினார்.

செங்கல்பட்டு,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்த்தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வைப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டம், சேலையூரைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்திற்கான வைப்புத் தொகை பத்திரத்தினை குழந்தைகளின் பாதுகாவலரான கவுசல்யா என்பவரிடம் மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத் நேற்று மாலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story