அரசு பள்ளியில் எலக்ட்ரானிக் பொருட்கள் திருடிய வழக்கில் வாலிபர் கைது
அரசு பள்ளியில் எலக்ட்ரானிக் பொருட்கள் திருடிய வழக்கில் வாலிபர் கைது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 10-ந்தேதி பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் மற்றும் அதனைச்சார்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று கரும்புகுப்பம் பகுதியில் வசித்து வரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரசு பள்ளியில் திருட்டு போன பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story