நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 Aug 2021 4:40 PM IST (Updated: 17 Aug 2021 4:40 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சி மற்றும் ஆனதாண்டவபுரம் ஊராட்சி பாவாநகர் இணைப்பு சாலையின் குறுக்கே ெரயில்வே பாதை செல்கிறது. இந்த சாலையில் ெரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும் வகையில் சதுர வடிவில் சிமெண்டு சிலாப்புகள் வைக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த சாலையில் ஜல்லி கற்கள் மற்றும் சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. 

இதனால் இந்த சாலையை கடந்து செல்பவர்கள் அந்த சிமெண்டு சிலாப்புகளில் மோதி கால் இடறி கீழே விழும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக ெரயில் செல்லும் நேரத்தில் கேட் மூடப்படுவதால் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

ெரயில்வே கேட் திறந்தவுடன் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து பலர் கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே ரெயில்வே பாதையை கடக்கும் பகுதியில் நீடூர்- ஆனதாண்டவபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். 

Next Story