வலங்கைமான் அருகே குடும்பத்தகராறில் தொழிலாளி கீழே தள்ளி கொலை மருமகன் கைது


வலங்கைமான் அருகே குடும்பத்தகராறில் தொழிலாளி கீழே தள்ளி கொலை மருமகன் கைது
x
தினத்தந்தி 17 Aug 2021 5:38 PM IST (Updated: 17 Aug 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே குடும்பத்தகராறில் முதியவர் கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மருமகன் கைது செய்யப்பட்டார்.

வலங்கைமான்,

தி௫வாரூா் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மாணிக்கமங்கலம் குடியான தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது55). தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் 2-வது மகள் மணிமேகலைக்கும் வேடம்பூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவானந்தம் (30) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சிவானந்தத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் மணிமேகலை தனது குழந்தையுடன் மாணிக்கமங்கலத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். எனவே சிவானந்தம் தனது மனைவி மணிமேகலையை பல முறை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மணிமேகலை தனது கணவர் வீட்டுக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவானந்தம் மாணிக்கமங்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று தனது மனைவி மணிமேகலையை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது அவருக்கும் அவரது மாமனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சிவானந்தம் தனது மாமனார் நாகராஜை பிடித்து கீேழ தள்ளி வி்ட்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து வலங்கைமான் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிவானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story