தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் சிறப்பு மனுநீதிநாள் முகாம்


தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில்  சிறப்பு மனுநீதிநாள் முகாம்
x
தினத்தந்தி 17 Aug 2021 6:13 PM IST (Updated: 17 Aug 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ராம்தாஸ்நகர் இலங்கை அகதிகள் முகாமில் சிறப்பு மனுநீதி முகாம் நேற்று நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி ராம்தாஸ்நகர் இலங்கை அகதிகள் முகாமில் சிறப்பு மனுநீதி முகாம் நேற்று நடந்தது.
மனுநீதி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாப்பிள்ளையூரணி ராம்தாஸ்நகர், குளத்துவாய்பட்டி, தாப்பாத்தி ஆகிய 3 இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. 
இந்த முகாம்களில் தங்கி உள்ளவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் சிறப்பு மனுநீதி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று தூத்துக்குடி ராம்தாஸ்நகரில் உள்ள அகதிகள் முகாமில் மனுநீதி முகாம் நடந்தது. முகாமுக்கு அகதிகள் முகாம் தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார். அகதிகள் முகாமில் 57 குடும்பங்களை சேர்ந்த 160 பேர் உள்ளனர்.
51 மனுக்கள்
அவர்கள் தையல் எந்திரம், ரேஷன்கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இன்றும், நாளையும் குளத்துவாய்பட்டி, தாப்பாத்தி ஆகிய அகதிகள் முகாம்களில் மனுநீதி முகாம் நடத்தப்பட உள்ளது.

Next Story