வலங்கைமான் அருகே மனைவியை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை


வலங்கைமான் அருகே மனைவியை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 17 Aug 2021 6:21 PM IST (Updated: 17 Aug 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே மனைவியை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து வலங்கைமான் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வலங்கைமான்,

வலங்கைமான் அடுத்த ஆண்டான்கோவில் தலையாரி தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி(வயது 32). சம்பவத்தன்று குடும்ப தகராறில் உமாமகேஸ்வரியை அவருடைய கணவர் சவுந்தரராஜன் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரராஜனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வலங்கைமான் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவுந்தரராஜனுக்கு நீதிபதி சீதாலட்சுமி 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 1500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Next Story