வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு


வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 17 Aug 2021 6:34 PM IST (Updated: 17 Aug 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

வேடசந்தூர் :
வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் வளர்த்து வந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள மாடு மேய்ச்சலுக்கு சென்றபோது அங்குள்ள 18 ஆடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் போஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு கட்டி பொதுமக்கள் துணையுடன் சுமார் 1 மணி நேரம் போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.


Next Story