சமூக இடைவெளியை கடை பிடிக்காததால் வங்கிக்கு அபராதம்


சமூக இடைவெளியை கடை பிடிக்காததால் வங்கிக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 Aug 2021 6:39 PM IST (Updated: 17 Aug 2021 6:39 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் சமூக இடைவெளியை கடை பிடிக்காததால் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வந்தவாசி

வந்தவாசியில் சமூக இடைவெளியை கடை பிடிக்காததால் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. 

இதையறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் அங்கு வந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் வங்கிக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர். 

இந்த நிலையில் இன்றும் வங்கியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

 வங்கியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 

எனவே, வங்கி நிர்வாகம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story