தூத்துக்குடி கப்பல் மாலுமிக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற கப்பலில் தூத்துக்குடி மாலுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற கப்பலில் தூத்துக்குடி மாலுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடி மாலுமி
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற கப்பலில் மாலுமியாக பணியாற்றி வந்தார்.
அந்த கப்பல் கடந்த 15-ந் தேதி மாலத்தீவு நோக்கி சென்று கொண்டு இருந்த போது, தூத்துக்குடி மாலுமிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கப்பலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
கொரோனா தொற்று
பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் கப்பலில் இருந்த மேலும் 23 மாலுமிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மேலும் தூத்துக்குடி மாநகர சுகாதார அலுவலர்கள் கப்பல் முழுவதும் கடந்த 2 நாட்களாக கிருமிநாசினி தெளித்தனர். தொடர்ந்து கப்பல் தூத்துக்குடியில் இருந்து புறப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
-------
Related Tags :
Next Story