திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 628 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இந்த நிலையில் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டி, வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 2 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனிடையே நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story