நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பில் தேனிக்கு 4-வது இடம்


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பில்  தேனிக்கு 4-வது இடம்
x
தினத்தந்தி 17 Aug 2021 8:12 PM IST (Updated: 17 Aug 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தியதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பில் தேனி மாவட்டத்துக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது.

ஆண்டிப்பட்டி:

நோய் எதிர்ப்பு சக்தி 

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி காரணமாக மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 ஆய்வின் முடிவில் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்தது.

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. அதில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்ற அடிப்படையில், மாவட்ட வாரியாக முதல் 6 இடத்தில் விருதுநகர், சென்னை, மதுரை, தேனி, அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இடம் பிடித்துள்ளன. 

நோய் பரவல்

மேலும் தேனி மாவட்டத்தில் நோய் பரவல் சதவீதமும் 0.5 ஆக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்திய போதிலும், ஒரு மாதத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. 

இதேபோல் மாவட்டம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கேரளாவில் நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், அங்கிருந்து தேனி மாவட்டத்துக்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறினார்.
9 பேருக்கு கொரோனா 
தேனி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 96 ஆக உயர்ந்தது. 

சிகிச்சை பெற்ற 11 பேர் நேற்று குணமாகினர். தற்போது கொரோனா பாதிப்புடன் 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story