கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உதவி கலெக்டரிடம் மனு


கோவில்பட்டியில்  ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உதவி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 Aug 2021 8:28 PM IST (Updated: 17 Aug 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உதவி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது

கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் தாவீதுராஜா, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ராஜசேகரன், ரத்ததான கழகங்களின் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டம் நடத்தி உதவி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையின் இடதுபுறத்தில் லெனின் நகர் உள்ளது. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான லெனின் நகர் சாலை, மந்தித்தோப்பு சாலை, பசுவந்தனை சாலை இணைப்பு சாலையாகவும் உள்ளது.
தற்போது கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் பாலம் வேலை நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் லெனின் நகர் வழியாக செல்கின்றன. இந்த சாலையை தனி நபர்கள் ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஆக்கிர மிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி மனு வழங்கினோம். ஆனால், இதுவரை உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், லெனின் நகர் ஆக்கிர மிப்புகளை அகற்ற உதவி கலெக்டரின் கவனத்தை ஈர்ப்பதற்காக வருகிற 20-ந் தேதி முதல் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Next Story