மின்கசிவு காரணமாக வீடு தீயில் எரிந்து சாம்பல் 6 பவுன் நகைகள் - ரூ.2 லட்சம் நாசம்


மின்கசிவு காரணமாக வீடு தீயில் எரிந்து சாம்பல் 6 பவுன் நகைகள் - ரூ.2 லட்சம் நாசம்
x
தினத்தந்தி 17 Aug 2021 8:33 PM IST (Updated: 17 Aug 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் அருகே மின்கசிவு காரணமாக வீடு தீயில் எரிந்து சாம்பலானது. இதில் 6 பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் நாசமானது.

சேதுபாவாசத்திரம்,

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சி எட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது45). விவசாயி. இவரது மனைவி லதா. சம்பவத்தன்று இருவரும் விவசாய வேலைக்காக வெளியில் சென்று விட்டனர். வீட்டில் சுப்பிரமணியனின் தாயார் பாக்கியம் (67) மட்டும் இருந்துள்ளார். இந்தநிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு சுப்பிரமணியன் வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அலுவலர் செல்வராஜ் மற்றும் வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.

தீவிபத்தில் வீட்டில் இருந்த 6 பவுன் நகை, ரூ.2 லட்சம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் நில பத்திரங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, உடைகள் ஆகியவையும் தீயில் கருகின. பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஷ்வரன் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) முருகேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story