அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 8:46 PM IST (Updated: 17 Aug 2021 8:46 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு கூட்டுறவுத்துறை அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பிச்சைவேலு தலைமை தாங்கி பேசினார். 

அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்பை மீண்டும் அறிவிக்கவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட இணைச்செயலாளர் நாராயணசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் கருப்புச்சாமி நன்றி கூறினார். 

Next Story