இரும்பு வியாபாரி வீட்டில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு துறையினர் சோதனை
ஆற்காடு அருகே இரும்பு வியாபாரி வீட்டில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆற்காடு
ஆற்காடு அருகே இரும்பு வியாபாரி வீட்டில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே திமிரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 56).
இவர் அதே பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பழைய இரும்பு பொருட்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு துறை உயர்மட்ட அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழு திமிரியில் உள்ள தங்கராஜ் வீடு மற்றும் கடைகளில் சோதனை செய்தனர்.
காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை இந்த சோதனை நீடித்தது.
இந்த சோதனையில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story