தனியார் தொழிற்சாலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
கோவிலுக்கு சாலை அமைத்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நெட்டப்பாக்கம், ஆக.
கோவிலுக்கு சாலை அமைத்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியார் தொழிற்சாலை
நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலையின் உள்ளே பொறையாத்தம்மன் கோவில் உள்ளது. ஏரிப்பாக்கம், நத்தமேடு, ஏரிப்பாக்கம் காலனி ஆகிய கிராம மக்கள் பல ஆண்டுகளாக இங்கு வழிபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தொழிற் சாலையை சுற்றிசுவர் கட்டப்பட்டதால் கிராம மக்கள் கோவிலுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கோவிலுக்கு செல்ல பாதை ஒதுக்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் கோவிலுக்கு செல்ல சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்ததாக தெரிகிறது. ஆனால் இதுவரை சாலை அமைத்து கொடுக்கவில்லை.
பொதுமக்கள் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த 3 கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் சாலை அமைத்து தராததை கண்டித்து, தொழிற்சாலைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் அங்கு சென்று தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த விவகாரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story