காரைக்கால் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி புகார்

காரைக்கால் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி புகார்
x
தினத்தந்தி 17 Aug 2021 9:27 PM IST (Updated: 17 Aug 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால், ஆக.
காரைக்காலில் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்ப்பு கூட்டம் 
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு மின்துறை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மின்துறை செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருநள்ளாறு வணிகர்கள் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வாக்குவாதம்
கடந்த சில ஆண்டுகளாக, மின்துறையில் வரிக்கு மேல் வரியை போட்டு மக்களின் தலையில் சுமையை இறக்குவதாகவும், மின் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாத காரணத்தால், மின்துறை சரியாக செயல்படவில்லை என்றும் குற்றச்சாட்டி பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story