நோய் கொடுமையால் விரக்தி அடைந்த தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை


நோய் கொடுமையால் விரக்தி அடைந்த  தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Aug 2021 9:27 PM IST (Updated: 17 Aug 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

நோய் கொடுமையால் விரக்தி அடைந்த தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர், ஆக
வில்லியனூர்    அருகே    வடமங்கலத்தை    சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 53). இவருக்கு புனிதவள்ளி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விவேகானந்தன் தனது வீட்டின் எதிரே பேப்பர் மில் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விவேகானந்தன், நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில்    சிகிச்சை  பெற்றும்  குணமாகவில்லை. இதனால்  வாழ்க்கையில்  விரக்தி  அடைந்த அவர், நேற்று முன்தினம்  இரவு வீட்டில்  உள்ள  படுக்கை  அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று விவேகானந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story