கால்நடை தீவன வளர்ப்பு திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
தெங்கால் அருகே அரசு மேய்ச்சல் நிலத்தில் கால்நடை தீவன வளர்ப்பு திட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
திருவலம்
தெங்கால் அருகே அரசு மேய்ச்சல் நிலத்தில் கால்நடை தீவன வளர்ப்பு திட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், கால்நடைகளுக்கு தேவையான தீவன புல்களான கொழுக்கட்டை புல் மற்றும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் விதை விதைத்தல் மற்றும் தீவன மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றை கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் பொன்னையை அடுத்த தெங்கால் அருகே கே.என்.பாளையத்தில் உள்ள அரசு மேய்ச்சல் நிலத்தில் கால்நடை தீவன வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
இதில் 17.5 ஏக்கர் நிலத்தில் தீவன மரக்கன்றுகளான சூபாபுல், கிளிசிரிடியா, வெல்வேல், வேம்பு ஆகியவற்றை நடவு செய்யும் பணியினை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது படிப்படியாக அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக விரிவுப்படுத்தப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கால்நடைத்துறை வேலூர் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story