ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தாமதித்து விட்டது
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தாமதித்து விட்டது
கோவை
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள, இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதில் மத்திய அரசு தாமதித்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
மாநிலக்குழு கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் கோவையில் 2 நாட்கள் நடைபெறுகிறது.நேற்று தொடங்கிய இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கலந்து கொண்டு கட்சியின் செயல் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள்குறித்து விவாதித்தார்.முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
3-வது அலை
மத்திய அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டவில்லை. கொரொனா மருந்து இருப்பு குறித்து தெளிவான பதிலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு, குன்னூர் பகுதிகளில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
பொதுத்துறை நிறுவனங்கள்தான் இந்த தடுப்பூசிகளை தயாரித்து கொடுக்க வேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக அவர்களை தயாரிக்க செய்துள்ளனர். மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.
தற்போது பாரதீய ஜனதாகட்சியினர் நாடு முழுவதும்26 மாநிலங்களில் யாத்திரை, பொதுக்கூட்டம் என்று 3-வது அலையை வரவேற்பதுபோல் செயல்பட்டு வருகிறார்கள். 3-வது அலை வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். நாங்கள் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடித்து வருகிறோம்.
பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோலிய பொருட்களுக்கு அதிகப்படியான வரியை மத்திய அரசு விதிக்கின்றது. பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியால் 2020-21-ம் ஆண்டில் மட்டும் மத்திய அரசு ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் கோடிவருவாய் ஈட்டி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ரூ.15.6 லட்சம் கோடி பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிவிதிப்புகள் மூலம் வருவாய் ஈட்டி உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணை உயராத நிலையில் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் மூலமே அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்
இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறையினர், பெகாசஸ் செயலி மூலம் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டுள்ளனர். இதுஜனநாயகத்துக்கு எதிரானது.
வருகிற 20-ந்தேதி 20 எதிர்கட்சிகளுடன் ஆன்லைன் மூலம் பெகாசஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு பெகாசஸ் விவகாரத்தில் போராட்டம் நடத்த இருக்கின்றோம்
மத்திய அரசு தாமதம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் கையில் ஆட்சி நிர்வாகம் வந்துள்ளது. அங்குள்ள குழப்பமானநிலையை அறிந்து மற்ற நாடுகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே அவர்களது நாட்டு மக்களை விமானம் மூலம் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் மத்திய அரசு நமது நாட்டு மக்களை அங்கிருந்து மீட்டு வருவதில் தாமதம் செய்துவிட்டது. இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது. காபூலில் எவ்வளவு இந்தியர்கள் இருக்கின்றனர்?என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை.
மத்திய அரசு 15 ஆண்டுகள் ஆன வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று ஸ்கிராப் பாலிசி கொண்டு வருவது முதலாளித்து வத்துக்கு ஆதரவாகத்தான். குஜராத்தில் உள்ள சில முதலாளிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பயன்தரும். சாதாரண மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பதில்தான் மத்திய பாரதீய ஜனதா அரசின் செயல்பாடுகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story