திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள வேலனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது21). இவரது மனைவி மீனா (19). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மீனா குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டப்பட்டி போலீசார் விரைந்து சென்று மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் அரூர் உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story