நல்லம்பள்ளி வாரச்சந்தைக்கு அனுமதி வழங்க கோரி காய்கறிகளுடன் வியாபாரிகள் தர்ணா போராட்டம்
நல்லம்பள்ளி வாரச்சந்தைக்கு அனுமதி வழங்க கோரி காய்கறிகளுடன் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளியில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். கொரோனா பரவலை தடுக்க இந்த வாரச்சந்தைகளுக்கு முறையான அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இதனிடையே நேற்று வாரச்சந்தை கூடியது. இதற்காக வியாபாரிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் வந்து வாரச்சந்தை கூடக்கூடாது எனவும், வியாபாரிகளை கலைந்து செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், வாரச்சந்தைக்கு முறையாக அனுமதி வழங்க கோரி நேற்று காய்கறிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்றதலைவர் புவனேஸ்வரி மூர்த்தி சந்தைக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story