திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Aug 2021 10:37 PM IST (Updated: 17 Aug 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் உடன் இருந்தரை குடும்பத்தினர் அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம்

அரக்கோணத்தில் உடன் இருந்தரை குடும்பத்தினர் அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போலீசில் புகார் 

சித்தூர் மாவட்டம் நகரியை சேர்ந்தவர் அஜித் (வயது 27). திருநங்கையான இவர் நேற்று  வீட்டிலிருந்து வெளியேறி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை தண்டலம் பகுதியில் உள்ள திருநங்கை மோனிஷா வீட்டிற்கு வந்துள்ளார். 

இந்த நிலையில் அஜித்தின் அண்ணன் ஜனா மற்றும் தாய் தேசம்மாள் ஆகியோர் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் கும்பினிபேட்டை பகுதியில் உள்ள திருநங்கைகள் தனது தம்பி அஜித்தை கடத்தி வைத்திருப்பதாகவும் அவர்களிடம் இருந்து மீட்டு தருமாறு புகார் அளித்தார்.
 அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்கரவர்த்தி, அஜித்தை அழைத்து விசாரணை நடத்தி கொண்டிருந்தார். 

திருநங்கைகள் போராட்டம்

அப்போது. திருநங்கை மோனிஷா தலைமையிலான திருநங்கைகள் அஜித்தின் குடும்பத்தினர் தங்களை தாக்க வந்ததாகவும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி புகார் அளித்தனர். 

அஜித்திடம் விசாரணை நடைபெறுவதால் சப்- இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி புகாரை வந்து பெற்று கொள்வதாக தெரிவித்தாக தெரிகிறது. உடனே திருநங்கைகள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி திடீரென தாலுகா அலுவலகம் அருகே திருத்தணி சாலையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள், அஜித்தின் அண்ணன் ஜனா மற்றும் தாயார் தேசம்மாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது திருநங்கைகள் அஜித்தை குடும்பத்தினருடன் திரும்ப அனுப்புவதை ஏற்காததால். பின்னர் திருநங்கைகளோடு அஜித்தை விட்டு செல்வதாக போலீசாரிடம் ஜனா மற்றும் தேசம்மாள் கூறி ஊருக்கு திரும்பி சென்றனர்.
 
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story