ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் குன்னத்தூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு குன்னத்தூர் மற்றும் சீக்கம்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 6 வார்டுகளில் வசிக்கும் மக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் 4 வார்டுகளில் வசிப்பவர்கள் மட்டும் தான் குன்னத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வாக்களிக்க முடியும் எனவும் மீதமுள்ள 2 வார்டுகளை சேர்ந்த மக்கள் அருகே உள்ள கிளியூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வாக்களிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குன்னத்தூர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை இட்டனர். பின்னர் அங்கிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஏற்கனவே இருந்த முறைப்படி குன்னத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6-வார்டு மக்களையும் குன்னத்தூர் கிராமத்திலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர், வாக்களிப்பதில் எதுவும் மாற்றம் செய்யவில்லை. ஏற்கனவே இருந்த முறைப்படிதான் தேர்தல் நடைபெறும் என்று உறுதி அளித்தார். இதனால் நிம்மதி அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Related Tags :
Next Story