குமரலிங்கம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் முறைகேடாக குழாய் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 4 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு ெசய்யப்பட்டுள்ளது.

குமரலிங்கம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் முறைகேடாக குழாய் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 4 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு ெசய்யப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 17 Aug 2021 11:14 PM IST (Updated: 17 Aug 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

குமரலிங்கம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் முறைகேடாக குழாய் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 4 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு ெசய்யப்பட்டுள்ளது.

போடிப்பட்டி, 
குமரலிங்கம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் முறைகேடாக குழாய் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 4 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு ெசய்யப்பட்டுள்ளது.
4 மண்டலங்கள்
பி.ஏ.பி. பாசனத்திட்டத்துக்குட்பட்ட தொகுப்பணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் மற்றும் பாலாற்றின் மூலம் பெறப்படும் தண்ணீர் திருமூர்த்தி அணையில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தண்ணீர் உரிய காலத்தில் போதிய இடைவெளியுடன் பாசனத்துக்குத் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
 இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன நீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி தற்போது 4-ம் மண்டல பாசனத்துக்கு கடந்த 3-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் கடைமடைக்குத் தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
போலீசில் புகார்
இதனையடுத்து தண்ணீர் திருட்டைத் தடுக்க அதிகாரிகள் இரவு பகலாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, இளம்பொறியாளர் விஜயசேகர் உள்ளிட்டோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது குமரலிங்கத்தையடுத்த மருள்பட்டி பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் முறைகேடாக குழாய் அமைத்து தண்ணீரை கிணற்றுக்குக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அந்த குழாய்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். 
மேலும் 4-ம் மண்டல பாசனத்துக்குட்படாத நிலங்களுக்கு முறைகேடாக தண்ணீர் கொண்டு சென்ற 4 விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story