இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு
க.பரமத்தி அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
க.பரமத்தி,
நிலப்பிரச்சினை
க.பரமத்தி அருகே காட்டு முன்னுரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 70). இவருடைய மனைவி மலர்விழி. இவர்களது வீட்டின் எதிரே முருகேசன் (55) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே ஏற்கனவே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கடந்த 16-ந் தேதி முருகேசன் வீட்டின் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் வேலை செய்ய வந்துள்ளனர். இதனை தங்கவேல் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
8 பேர் மீது வழக்கு
இதில் முருகேசனுக்கு ஆதரவாக 3 பேர் தங்கவேல் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், முருகேசனின் மகன் பிரசாந்த் (23) தங்கவேலை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தங்கவேல் மற்றும் அவரது மனைவி தாக்கியதாக முருகேசன் மனைவி கீதாவும் (47), பிரசாந்தும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் இருதரப்பை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் மோதலில் ஈடுபட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story