திருவாரூரில் பலத்த மழை
திருவாரூரில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரெயில் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர்;
திருவாரூரில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரெயில் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெயில் தாக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் மக்கள் வெளியில் மிகவும் சிரமத்துடன் சென்று வந்தனர். கோடை வெயிலை மிஞ்சும் அளவு சுட்டெரித்த வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் குளிர்பான கடைகளை நோக்கி சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 3 மணியளவில் வானில் கருமேக கூட்டம் சூழ்ந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
இதைத்தொடர்ந்து திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவு முழுவதும் பலத்த மழைபய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மழைநீர் தேங்கியது
அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கி குளம் போல தங்கி நின்றதால் வாகன ஓட்டுனர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். சாலையோர கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. திருவாரூர் ரெயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story