பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை


பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 17 Aug 2021 11:43 PM IST (Updated: 17 Aug 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரியமங்கலத்தில் பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி, ஆக.18-
திருச்சி அரியமங்கலத்தில் பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரிவாள்வெட்டு
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 51). இவருடைய மனைவி அனுராதா (39). தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வெங்கடகிருஷ்ணன் விவாகரத்து கேட்டு திருச்சி கோட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அனுராதாவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
 இந்தநிலையில் கடந்த 9.2.2012 அன்று அனுராதா கல்கண்டார்கோட்டை பகுதியில் மீன் வாங்கி விட்டு வரும் போது, வெங்கடகிருஷ்ணனின் நண்பர்களான நெட்டை ராஜா, மருதகாசி, சிவகுமார் ஆகியோர்் அனுராதாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்து உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, மருதகாசி, சிவகுமார் ஆகியோரை கைது செய்து திருச்சி முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தனர்.
5 ஆண்டு சிறை
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் அனுராதாவுக்கு கொடுங்காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக சிவகுமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதமும் மற்றும் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இவற்றை ஏக காலததில் அனுபவிக்கும் படி தீர்ப்பில் குறிப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்கில் ஜெயராமன் ஆஜரானார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story