மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48,105 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல், ஆக.18 -
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48,105 ஆக அதிகரித்து உள்ளது.
56 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படிப்பாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48 ஆயிரத்து 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று ஒரே நாளில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 105 ஆக அதிகரித்து உள்ளது.
513 பேருக்கு சிகிச்சை
மாவட்டத்தில் நேற்று 52 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 47 ஆயிரத்து 131 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 461 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 513 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், 3-ம் அலையை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story