பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை
நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாதனூத்து இந்திராநகரைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகள் தமிழ்ச்செல்வி (வயது 17). இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அடிக்கடி டி.வி. பார்ப்பதாகவும், செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறி அவருடைய தாய் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story