கர்நாடகத்தில் புதிதாக 1298 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1298 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Aug 2021 1:23 AM IST (Updated: 18 Aug 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

  கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 269 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 31 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 32 பேர் உயிரிழந்தனர்.

  இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,833 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 73 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது. 21 ஆயிரத்து 481 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

  பெங்களூரு நகரில் 340 பேர், தட்சிண கன்னடாவில் 288 பேர், மைசூருவில் 88 பேர், உடுப்பியில் 122 பேர், சிக்கமகளூருவில் 59 பேர், துமகூருவில் 52 பேர், சிவமொக்காவில் 51 பேர், உத்தரகன்னடாவில் 48 பேர், குடகில் 37 பேர், ஹாசனில் 66 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 10 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர், ஹாசன், குடகு, கோலார், மைசூரு, சிவமொக்காவில் தலா 2 பேர் என மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story