சேலம் மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Aug 2021 3:08 AM IST (Updated: 18 Aug 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் இருந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் ஏற்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் 123 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 29 பேர் பாதிக்கப்பட்டனர். அதே போன்று சேலம் ஒன்றியம், கொங்கணாபுரம், காடையாம்பட்டி, எடப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 51 பேருக்கும் தொற்று பாதிப்பு இருந்தது. இதே போல கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 4 பேர், கடலூர், கோவை, திருச்சி, தர்மபுரியில் இருந்து வந்த தலா 5 பேர், திருச்சியில் இருந்து வந்த 6 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 7 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 117 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தொற்று பாதித்தவர்களில் நேற்று 2 பேர் இறந்தனர்.

Next Story