கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விவசாயியை கொன்ற மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விவசாயியை கொன்ற மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Aug 2021 3:31 AM IST (Updated: 18 Aug 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விவசாயியை கொலை செய்த மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சேலம்
அடிக்கடி சுற்றுலா
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குகாடு விநாயகா நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 42). விவசாயி. இவருடைய மனைவி ஆலயமணி (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமசந்திரன் நகர் பகுதிைய சேர்ந்தவர் தென்குமார் (31). இவர் டிராவல்ஸ் டிரைவர்.
ஆலயமணி அடிக்கடி அந்த பகுதியில் உள்ளவர்களுடன் கோவில் உள்பட பல்வேறு இடங்களுக்கு தென்குமாரின், டிராவல்ஸ் வேனில் அடிக்கடி சுற்றுலா சென்று வந்துள்ளார். ஒரு முறை வேனில் சுற்றுலா சென்ற போது ஆலயமணியின் பணப்பை தொலைந்து விட்டது. இதையடுத்து தென்குமாரின் செல்போனில் தொடர்பு பணப்பை தொலைந்து போன தகவலை ஆலயமணி தெரிவித்து உள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 
கள்ளக்காதல்
பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த தொடர்பு அவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். இவர்களது கள்ளக்காதல் கலியமூர்த்திக்கு தெரிய வந்தது. இதையடுத்து மனைவியை அவர் கண்டித்து உள்ளார்.இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருக்கிறார் என்றும், அவரை கொலை செய்தால் தான், நிம்மதியாக இருக்க முடியும் என்று தென்குமாரிடம், ஆலயமணி கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் கலியமூர்த்தியை கொலை செய்ய முடிவு செய்தனர். மேலும் கொலையில் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்று ஆலயமணி தெரிவித்துள்ளார்.
கத்தியால் குத்திக்கொலை
கடந்த 17.8.2018 அன்று கள்ளக்காதலனிடம் தன் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து செல்கின்றேன். கணவர் மட்டும் வீட்டில் இருப்பார். அப்போது அவரை கொலை செய்து விடுங்கள் என்று தென்குமாரிடம் கூறி விட்டு அன்று தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு திருநள்ளாறுக்கு ஆலயமணி சென்று விட்டார். இந்த நிலையில் தென்குமார் மற்றும் அவரது நண்பர் ஹரிகிருஷ்ணன் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் அன்று இரவு கலியமூர்த்தி வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கலியமூர்த்தியை 3 பேரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினர். மொத்தம் 32 இடங்களில் குத்தி உள்ளனர். இதில் ரத்த கலியமூர்த்தி வெள்ளத்தில் வீட்டிலேயே துடி, துடித்து இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் தலைமையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆலயமணி, தென்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கு சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண்-1-ல் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி கலியமூர்த்தியை கொலை செய்த குற்றத்திற்காக அவருடைய மனைவி ஆலயமணி, கள்ளக்காதலன் தென்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு ஆயுள்தண்டனையும், மேலும் கொலைக்கு கூட்டு சதி செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனை என 3 பேருக்கும் இரட்டை ஆயுள்தண்டனையும், மேலும் 3 பேரும் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆபிரகாம் லிங்கன் தீர்ப்பு அளித்தார். இதையடுத்து ஆலயமணி, தென்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கோவை சிறையில் அடைக்க போலீசார் வேனில் அழைத்து சென்றனர். ஆயுள் தண்டனை பெற்ற தென்குமாருக்கு திருமணம் ஆகிய மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 17 வயது சிறுவன் மீதான வழக்கு சேலம் சிறார் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கொலை நடந்த அதே நாளில் தீர்ப்பு
விவசாயி கலியமூர்த்தியை, அவருடைய மனைவி ஆலய மணி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி அன்று தனது கள்ளக்காதலன் தென்குமாரை ஏவி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதுவும் கொலை நடந்த அதே ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story