புனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
ஆலந்தூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும், 2 கோடியே 52 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 45 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழகத்திற்கு இம்மாத ஒதுக்கீட்டாக 79 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை 26 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து நேற்று சென்னை வந்த விமானத்தில் 22 பெட்டிகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். சில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இவை பல்வேறு மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story