திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் கட்டுப்பாடின்றி ஓடிய கார்


திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் கட்டுப்பாடின்றி ஓடிய கார்
x
தினத்தந்தி 18 Aug 2021 2:22 PM IST (Updated: 18 Aug 2021 2:22 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் கட்டுப்பாடின்றி ஓடிய கார் ‘ஓம் முருகா’ பெயர் பலகையில் மோதி நின்றது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 41) என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் காவடி எடுத்துக்கொண்டு மலைக்கோவிலுக்கு வந்தார். காரில் 10 பேர் இருந்தனர்.

சாமி தரிசனம் முடிந்து அவர்கள் இரவு கோவிலில் இருந்து வெளியே வந்து காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர். காரை சுரேஷ் ஓட்டினார். அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து மலை அடிவாரத்தை நோக்கி வேகமாக சென்றது. இந்த காரை சுரேஷ் கட்டுக்குள் கொண்டு வர முயன்றும் முடியவில்லை. அங்கு இருந்த இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு கார் மேலும் வேகமாக மலைப்பாதையில் பிரதான சாலையை நோக்கி ஓடியது. செய்வதறியாது திகைத்த சுரேஷ் கீழ்பகுதியில் கோவில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓம் முருகா பெயர் பலகை மீது மோதி நின்றது. இதில் காரின் முன் சக்கரம் உடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினார்.

Next Story