புற்றுநோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை


புற்றுநோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை
x
தினத்தந்தி 18 Aug 2021 6:30 PM IST (Updated: 18 Aug 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த, உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில், தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

அதன்படி தேனி மாவட்டத்திலேயே முதன் முறையாக புற்று நோயாளிகளுக்கு ஹீமோதெரபி சிகிச்சை நேற்று முதல் அளிக்கப்படுகிறது. இதனால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.  

 இது குறித்து அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பாரதி கூறியதாவது:-
கார்சிமோமா (மனிதர்களுக்கு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் தாக்ககூடியது), சார்க் கோமா (கெட்டியான சதைகள் மற்றும் எலும்புகளில் தாக்ககூடியது) மற்றும் லிம்போமாலுக்சிமியா (ரத்தத்தில் பரவக்கூடியது) என புற்றுநோய் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் பெருமபாலும் நம்பிக்கை இழந்து விடுகின்றனர். இவர்களுக்கு, முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஹீமோதெரபி சிகிச்சை அளித்து வருகிறோம். 

மேலும் வெளியில் விற்பனை செய்யப்படும் நோய் எதிர்ப்பு திறன் மிக்க மருந்துகள் வாங்கப்பட்டு, உள்நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே முதல்-அமைச்சர் காப்பீடு திட்ட அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசு மருத்துவமனைக்கு புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு வரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story