ஊதிய உயர்வு வழங்க வேண்டும் இணைப்பதிவாளரிடம் கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கை
ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று இணைப்பதிவாளரிடம் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை மனு விடுத்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் சி.ஐ.டி.யூ. மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகையன், செயலாளர் முருகானந்தம், பொருளாளர் செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் செல்வம், கூட்டுறவு சங்க இயக்குனர் செல்வம், மற்றும் நிர்வாகிகள் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருவாரூர், மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களுக்கு இதுவரை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படாமல் உள்ளது. ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு மற்றும் பதிவாளர் அறிவித்த ஊதிய உயர்வு இது வரை வழங்கப்படவில்லை.
எனவே ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் எடையாளரை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட இணைப்பதிவாளர் வருகிற 31-ந் தேதிக்குள்(செவ்வாய்க்கிழமை) ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பதிவாளர் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது துணைப்பதிவாளர் கார்த்திகேயன், கண்காணிப்பாளர்கள்சவுந்தரராஜன், விஜயன், ஜான் அலெக்சாண்டர் ஆகியோர் இருந்தனர்.
Related Tags :
Next Story