காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி


காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 18 Aug 2021 6:57 PM IST (Updated: 18 Aug 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே உள்ள காந்திக்கிராம பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறுமலையில் வேளாண் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழக (பொறுப்பு) துணைவேந்தர் பேராசிரியர் ரெங்கநாதன் வழிகாட்டுதலின்படியும், வேளாண்மை மற்றும் கால்நடை துறை தலைவர் கண்ணன் ஒப்புதலின் பேரில் வேளாண் படிப்பில் பி.எஸ்சி. ஹானர்ஸ் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் ஒரு மாதம் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண்மை சார்ந்த குழுக்களை சந்தித்து பயிற்சி பெற்றனர். 

இதில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாய சாகுபடியை அதிகரிப்பது பற்றி வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் நேரடியாக விவசாயிகளை சந்தித்து பேசினர். மேலும் வேளாண் உற்பத்தியாளர் குழுவினர், விவசாய சங்கத்தினர் சந்தித்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். 


மேலும் வேளாண் ஆராய்ச்சி மையங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பற்றியும் மாணவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் சிறுமலையில் விவசாயிகளை சந்தித்து சிறுமலை வாழை, பலா, சவ் சவ் உள்ளிட்ட மலைப்பயிர்கள் சாகுபடி முறைகளை கேட்டறிந்தனர். 

ரெட்டியார்சத்திரத்தில் உள்ள இந்தோ-இஸ்ரேல் தொழில் நுட்பத்துடன் கூடிய மகத்துவ மையத்தில் குழிதட்டு மற்றும் பசுமை குடில் சாகுபடி முறை பற்றியும் பார்வையிட்டனர். அதன் செய்முறைகளை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். 

Next Story