தூத்துக்குடியில் வடமாநில கடைக்காரர்கள் 2பேர் கைது
தூத்துக்குடியில் வடமாநில கடைக்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்தவர் வேல்சங்கர் (வயது 25). இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் எஸ்.எஸ்.மூர்த்தி தெருவில் வடமாநிலத்தவர்கள் நடத்தி வரும் கடையில் ஒரு துடைப்பம் வாங்கினாராம். பின்னர் அதில் பழுது இருந்ததால், அதனை மாற்றித்தருமாறு கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது கடை உரிமையாளர்களான ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார் (47), உமாராம் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து வேல்சங்கரை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த வேல்சங்கர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், உமாராம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story