தர்மபுரியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2021 9:01 PM IST (Updated: 18 Aug 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தர்மபுரி பிரிவு சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்களின்‌ கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் விஜயன், மாநில நிர்வாகிகள் நாகராஜன், ஜீவா மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முத்தரப்பு ஒப்பந்தபடி ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். களப்பிரிவில் உள்ள காலி பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து பணி நிரந்தரம் செய்யவேண்டும். மின் விபத்தில் ஒப்பந்த தொழிலாளர் உயிரிழந்தால் அவருடைய குடும்பத்துக்கு கருணைதொகை மற்றும் வாரிசுகளுக்கு மின்வாரியத்தில் நிரந்தர பணி வழங்க வேண்டும். திட்ட பணிகள் மற்றும் விரிவாக்க பணிகளில் தொழிலாளர்களுக்கு உரிய பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story