திருமூர்த்திமலை அணையில் சுற்றுலாவை மேம்படுத்த படகு சவாரி தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்தகுமார் தெரிவித்தார்.
திருமூர்த்திமலை அணையில் சுற்றுலாவை மேம்படுத்த படகு சவாரி தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்தகுமார் தெரிவித்தார்.
தளி
திருமூர்த்திமலை அணையில் சுற்றுலாவை மேம்படுத்த படகு சவாரி தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்தகுமார் தெரிவித்தார்.
சாகச சுற்றுலாவிற்காக தேர்வு
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் அதன் மூலம் வருவாய் ஈட்டவும் சுற்றுலாவில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சில சுற்றுலாத் தலங்களில் சாகச சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சாகச சுற்றுலா திட்டத்தை அறிவித்து உள்ளது.
அதில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த திருமூர்த்திமலை பகுதி சாகச சுற்றுலாவிற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான முதல் கட்ட ஆய்வை மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்தகுமார் சுற்றுலா வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுடன் மேற்கொண்டார்.
ஆய்வு
அப்போது அரவிந்தகுமார் கூறியதாவது:-
திருமூர்த்தி அணைப்பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் சாகச சுற்றுலா நடவடிக்கை மேற்கொள்வதற்கு நிலம் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டு உள்ளது. அதில் சுற்றுலாத் துறையின் மூலமாக சாகச சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருமூர்த்தி அணைப்பகுதியில் ஏற்கனவே தனியார் அமைப்பு நீர்சார்ந்த சாகச சுற்றுலாவை நடத்தி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்படுகின்ற பாதுகாப்பு வசதிகள் குறித்தும், தனியார் அமைப்பு நடத்தும் சாகசச் சுற்றுலா நடவடிக்கைகளை அரசே ஏற்று நடத்துவதற்கான வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டது.
பைபர் துடுப்பு படகு
அப்போது தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும், முதலுதவி குறித்த செயல் விளக்கங்களும், அங்கு பயன்பாட்டில் உள்ள உபகரணங்கள் குறித்த நேரடியான செயல் விளக்கமும் பார்வையிடப்பட்டது. அத்துடன் கையாக் என்னும் தனிநபர் பைபர் துடுப்பு படகு மூலம் அணைக்கட்டு நீர்தேக்கப்பகுதியில் எனது தலைமையில் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது சுற்றுலா வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் தனியார் பயிற்சி மைய பாதுகாப்பு வீரர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story