2 சாராய வியாபாரிகள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
2 வியாபாரிகள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே நாககுப்பம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சுரேஷ் என்கிற சைடு சுரேஷ் (வயது 22), தகரை கிராமத்தை் சேர்ந்த ராமசாமி மகன் மோடி என்கிற ஜெயவேல் (22). சாராய வியாபாரிகளான இவர்கள் மீது சாராயம் கடத்தல், விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களது குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சுரேஷ், ஜெயவேலை கைது செய்ய உத்தரவிடக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்அடிப்படையில் சுரேஷ், ஜெயவேலை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யக்கோரி கலெக்டர் ஸ்ரீதர், சின்னசேலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சுரேஷ், ஜெயவேல் ஆகியோரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story