அழுகிய மீன்கள் விற்பனை
அழுகிய மீன்கள் விற்பனை
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் மீனவர் நலத்துறையினர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் மற்றும் பி.என். ரோட்டில் உள்ள மீன் விற்பனை கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மீன் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ அளவிலான அழுகிய மீன் கண்டறிந்து அழிக்கப்பட்டது. மேலும், பயன்படுத்த தகுதியற்ற 20 கிலோ மீனும் கண்டறிந்து, அழிக்கப்பட்டது. இந்த மீன்களை விற்பனை செய்த 5 மீன் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுபோல் மீன் விற்பனை செய்யும் முறை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story