மீன்பிடி சட்ட விதிகள் பின்பற்றப் படுகிறதா? நவீன படகில் கடலுக்குள் சென்று அதிகாரிகள் திடீர் ஆய்வு
மீன்பிடி சட்ட விதிகள் பின்பற்றப் படுகிறதா? என்று நவீன படகில் கடலுக்குள் சென்று அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனா்.
கடலூர் முதுநகர்,
கடலூர் கடல் பகுதியில் நேற்று கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், மீன்வளத்துறை ஆய்வாளர் மணிகண்டன், மேற்பார்வையாளர் அறிவேந்தன், கடல் சட்ட அமலாக்கப்பிரிவு காவலர் அய்யப்பன், ஆகியோர் நவீன படகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, கடலூர் துறைமுகத்தில் இருந்து நவீன படகில் சென்று கடல் பகுதியில் ரோந்து மற்றும் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
இந்து பணியின் போது விசைப்படகுகள் குறிப்பாக எஸ். டி.பி., ஐ. பி. வகைப் படகுகள் கடலூர் துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் மைலகளுக்குள் மீன் பிடிக்கிறதா? என்றும், அவர்களின் வலைகளில் 40 மில்லி மீட்டர் கன்னி அளவுக்கு கீழே உள்ளதா? எனவும், அவர்களது விசைப்படகுகளில் என்ஜின் குதிரைத்திறன் 240 மேல் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.
மேலும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வரும் படகுகளை நிறுத்தி, அதில் வந்த மீனவர்களிடம் மீன்பிடி சட்டவிதிகளை பின்பற்ற அறிவுரையும் வழங்கினர். மேலும் மீன்பிடி சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.
Related Tags :
Next Story