மாவட்ட செய்திகள்

தோப்பில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; முதியவர் கைது + "||" + Seizure of ration rice

தோப்பில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; முதியவர் கைது

தோப்பில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; முதியவர் கைது
மூலிமங்கலம் அருகே தோப்பில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நொய்யல்,
ரகசிய தகவல்
கரூர் மாவட்டம் மூலிமங்கலம் அருகே ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வதற்காக ஒரு தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட தோப்புக்கு சென்று பார்த்தனர். 
ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது அங்கு ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தோப்புக்குள் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததாக காந்தி நகர் பகுதியை சேர்ந்த மணி (வயது 66) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
2. கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல்
மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
4. லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
5. லாரியில் கடத்திய 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தேனியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 13 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.