3 கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
சிவகாசியை சுற்றி அமைய உள்ள சுற்றுவட்டச்சாலை தொடர்பாக 3 கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் 90 பேர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
சிவகாசி,
சிவகாசியை சுற்றி அமைய உள்ள சுற்றுவட்டச்சாலை தொடர்பாக 3 கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் 90 பேர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
சுற்றுவட்டச்சாலை
தொழில்நகரமான சிவகாசியை சுற்றி 10 கிராமங்களை இணைக்கும் வகையில் 33 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுவட்டச்சாலை அமைக்க கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி மிகவும் தாமதமாக நடந்த நிலையில் தற்போது சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது. இற்கான நிலங்கள் கண்டறியப்பட்ட நிலையில் நிலத்தின் உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த சுற்றுவட்டச்சாலைக்காக கீழத்திருத்தங்கல், திருத்தங்கல், வடப்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, ஈஞ்சார். ஆனையூர், வெற்றிலையூரணி, அனுப்பன்குளம், நாரணாபுரம், கொங்கலாபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு கூட்டம்
இந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அனுப்பன் குளம், நாரணாபுரம், கொங்கலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 90 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களசுப்பிரமணியம், சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன் ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுவட்டச்சாலையை சிறிதளவு மாற்றி அமைக்கவும், அதற்கு தேவைப்படும் நிலத்தை வழங்குபவர்களுக்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டும் சிலர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த கருத்துகேட்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தனி தாசில்தார் சின்னதுரை செய்திருந்தார்.
Related Tags :
Next Story