தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 19 Aug 2021 1:04 AM IST (Updated: 19 Aug 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த அயோத்தி மகன் மணிப்பாண்டி (வயது32). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அயோத்தி கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story